கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுங்கள்!

கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமங்களில் ஒன்றான காஞ்சிரமோட்டை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான பயிற்செய்கையை மேற்கொள்ள வனவளத் திணைக்களத்தினர் தடை விதிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 -முதல் 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீளக்குடியேறினர். அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றன. அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணிகளில் தோட்டம் மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்தனர். இதனால் உழுத நிலங்களில் கூட பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அமைச்சர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற அரச கூட்டங்களிலும், அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் குறித்த காணிகள் அங்கு வாழும் மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதும், வனவளத் திணைக்களத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட தொடர்ந்தும் தடை ஏற்படுத்துகின்றனர். நாம் வியாபாரத்திற்காக பயிர் செய்யவில்லை. எமது நாளாந்த வயிற்றுப் பசிக்காகவே பயிர் செய்கின்றோம். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாம் ஒரு நேரம் கஞ்சி குடிக்கவேனும் அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எமது நிலத்தை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தும் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமங்களில் ஒன்றான காஞ்சிரமோட்டை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான பயிற்செய்கையை மேற்கொள்ள வனவளத் திணைக்களத்தினர் தடை விதிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 -முதல் 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீளக்குடியேறினர். அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றன. அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணிகளில் தோட்டம் மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்தனர். இதனால் உழுத நிலங்களில் கூட பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அமைச்சர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற அரச கூட்டங்களிலும், அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் குறித்த காணிகள் அங்கு வாழும் மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதும், வனவளத் திணைக்களத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட தொடர்ந்தும் தடை ஏற்படுத்துகின்றனர்.

நாம் வியாபாரத்திற்காக பயிர் செய்யவில்லை. எமது நாளாந்த வயிற்றுப் பசிக்காகவே பயிர் செய்கின்றோம். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாம் ஒரு நேரம் கஞ்சி குடிக்கவேனும் அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எமது நிலத்தை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தும் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

Comments