இலங்கை தமிழர் 03 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தமிழர் 03 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் நேற்று சனிக்கிழமை (22) காலை கடல் வழியாகச் சென்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03பேர் தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு அநாதரவாக இருப்பது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து தமிழ்நாடு கரையோர பொலிசார் படகில் சென்று நேற்று சனிக்கிழமை அவர்களை மீட்டு தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் 184 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி ஷாஹுல் ஹமீட், மன்னார் குறூப் நிருபர்

 

Comments