‘கிம்புலா எல குணா’வின் சகாக்கள் 03 பேர் கைது | தினகரன் வாரமஞ்சரி

‘கிம்புலா எல குணா’வின் சகாக்கள் 03 பேர் கைது

பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா எல குணா’வின் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு, கிரேண்ட்பாஸ், சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவரான 40 வயதுடைய மோதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 26.1 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 26.15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  மூன்றாவது சந்தேக நபர் மாதம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபர். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 8,00,000. ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments