வரக்காபொலை மண் சரிவு | தினகரன் வாரமஞ்சரி

வரக்காபொலை மண் சரிவு

வகுப்புக்கு சென்றதால் சிறிய மகன் உயிர் தப்பினார்

வரக்காபொலை – கும்பலியத்த பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட பெண்ணொருவரின் சடலமும் அவரது மகனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

மண் மேட்டுக்குள் சிக்கியிருந்த 47வயதான பெண்ணின் சடலமே நேற்று அதிகாலை முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 24வயதான மகனின் சடலமும் மீட்கப்பட்டது.  

இராணுவமும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இந்தசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.  

பெண்ணின் மூத்த மகன் மண்ணுக்குள் சிக்கியுள்ளதால் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. நேற்று (15) காலை காணாமல் போன மகனின் சடலமும் பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு சடலங்களும் வரக்காபொலை ஆஸ்பத்திரியின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

அனர்த்தம் இடம்பெற்ற போது, ​​குடும்பத் தலைவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   சம்பவத்தின் போது, ​​உயிரிழந்த பெண்ணின் பத்து வயதான இளைய மகன், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தற்போது தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வரக்காபொல பொலிஸார்ர் தெரிவித்தனர்.  

வரக்காபொல பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையுடனான காலநிலையையடுத்து, கும்பலியத்த பகதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழ்ந்தது. சம்பவத்தில் மூவர் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து நடத்திய தேடுதலில் 50வயதான ஆண்ணொருவர் மீட்கப்பட்டார். காயமடைந்த இவர் தற்போது வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  

இந்த நிலையில் இப் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது நேற்று அதிகாலை பெண்ணொருவரின் சடலம் இடிபாடுகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதுடன் சிறிது நேரத்தில் மற்றொருவரின் சடலமும் மீட்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

47வயதான தாயின் சடலமும் 24வயதான மகனின் சடலமுமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.   

Comments