
யாழ்.பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 09 வீதியில் முகமாலையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் நேற்று 15 ஆம் திகதி பகல் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணி யாளர்கள்பணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் மீது ரிப்பர் வாகனம் மோதியபோதே இந்த கோர விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் முகமாலையருகே வலது பக்கமாக திருப்ப முற்பட்ட போது அதே திசையில் மிக வேகமாக வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் பஸ் மீது மோதியதையடுத்து பஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. இதில் பயணித்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 44 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர்