கோதுமை மா விலை குறைந்தாலும் பாண்,பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

கோதுமை மா விலை குறைந்தாலும் பாண்,பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது

பேக்கரிகளுக்கு கோதுமை மாவை வழங்கும் இரண்டு தேசிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் அதனை 250ரூபாவுக்கு வழங்கினால் மாத்திரமே பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் .கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதே வேளை இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மா 290ரூபா வுக்கு விலை குறைக்கப்பட்டாலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 உள்நாட்டில் உள்ள இரண்டு தேசிய கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களும் கோதுமை மாவினை 310 மற்றும் 280 ரூபாவுக்கு வழங்கி வருவதாகவும் அத்துடன் கோதுமை மாவிலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் சந்தையில் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாகவே விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Comments