யாழ். உத்தரதேவி தடம் புரண்டது | தினகரன் வாரமஞ்சரி

யாழ். உத்தரதேவி தடம் புரண்டது

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் நேற்று காலை தடம்புரண்டுள்ளது.

தம்புத்தேகம - மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்துடன் கூடிய பெட்டியொன்றும், மேலும் ஒரு பெட்டியும் இவ்வாறு தடம்புரண்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக வடக்குக்கான ரெயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments