நடைமுறையிலிருந்த முறைமையில் மாற்றம்; சட்டக் கல்லூரி பரீட்சைகள் தாய்மொழியில் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

நடைமுறையிலிருந்த முறைமையில் மாற்றம்; சட்டக் கல்லூரி பரீட்சைகள் தாய்மொழியில் அவசியம்

சட்டக் கல்லூரியில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றும் உரிமையை மீண்டும் ஏற்படுத்தித் தருமாறு தமிழ், சிங்கள மொழிகளில் பரீட்சைக்கு தோற்றும் உரிமையை இழந்து வேதனைக்குள்ளாகியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஆரம்பத்தில் தமிழ் ,சிங்கள் மொழி மூல மாணவர்கள் தமது தாய் மொழி மூலம் சட்டக்கல்லூரியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் பரீட்சைகளுக்குத் தோற்றக் கூடிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இச் சந்தர்ப்பம் 2020டிசம்பர் மாதம் 30ஆம் திகதிய புதன் கிழமை 2020/12/20அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளதோடு,பரீட்சையில் ஒரு சில பாடங்கள் மாத்திரம் ஆங்கில மொழி மூலம் தோற்ற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  

இதனால் அவர்களுக்கு தமது தாய் மொழிகளான தமிழ், சிங்களம் மூலம் அப்பாடங்களுக்கு தோற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.  

மாணவர்களுக்கு தமது பிரயோக மொழியைத் தவிர மற்றமொரு மொழியினால் பரீட்சை எழுதுவதற்கு கட்டாயப்படுத்துவது வியப்பான ஒரு விடயமாகும். 

 அத்துடன் தமது தாய்மொழி தமிழ், சிங்கள மொழிகளில் கற்கும் ஒரு மாணவனுக்கு சட்டக் கல்லூரியில் ஆங்கில மொழியில் சட்டப் பரீட்சைக்கு தோற்றுமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றதாகும்.  

விருப்பமான மொழியொன்றினால் பரீட்சை எழுதுவதற்கு முன்னர் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்த வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். சட்டக் கல்லூரியில் அனைத்து விரிவுரைகளும் தற்போது நடத்தப்படும் முறையிலேயே ஆங்கில மொழியில் நடத்தப்படுவது தொடர்பாக எமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது.

ஆயினும், முன்னர் இருந்தது போல பரீட்சைக்கு மாத்திரம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு நாம் மீண்டும் மீண்டும் முறையிட்டுக் கேட்டுக் கொள்கிறோமென்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Comments