அதிக வேகத்தினால் இளைஞன் உயிரிழப்பு | தினகரன் வாரமஞ்சரி

அதிக வேகத்தினால் இளைஞன் உயிரிழப்பு

இங்கிரிய நம்பபான பகுதியில் விருந்தொன்றில் கலந்து கொண்டு காரில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயு டன்மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாச்சிமலை, இங்கிரிய, மஹா இங்கிரிய பகுதியைச் சேர்ந்த முத்துமால கலனஜித் என்ற 19வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். மூன்று இளைஞர்களை ஏற்றிச் சென்ற கார் இங்கிரியவில் இருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக பயணித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து நம்பபான பகுதியில் விபத்துக்குள்ளானது.

இறந்தவர் காரின் முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments