அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் "கலாரத்ன விபூஷண்" விருது வழங்கும் விழா | தினகரன் வாரமஞ்சரி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் "கலாரத்ன விபூஷண்" விருது வழங்கும் விழா

கலைஞர் விஜேயின் தலைமையில் இயங்கும் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், கடந்த 4வருடங்களாக தலைநகரில் உள்ள கலைஞர்களையும் சமூக சேவையாளர்களையும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்தாண்டு வருடாந்தம் வழங்கப்படுகின்ற விருதுக்கு "கலாரத்ன விபூஷணன்"  என நாமம் சூட்டப்பட்டுள்ளது. வழமைப் போல இவ்வருடமும் நுாற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களும் சமூக சேவையாளர்களும் கலாரத்ன விபூஷணன் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்விழாவானது இன்று 2022.10.09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள குளிரூட்டப்பட்ட புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தினகரன், வாரமஞ்சரி ஊடக அனுசரணையில் நடைபெறும் இந்த விழாவில் கொழும்பு கருமாரியம்மன் ஆலய பிரதம குரு குருசாமி  ரங்கநாத சுவாமி விஜயாநந்த், அகில இலங்கை ஐயப்பன் சுவாமி யாத்திரிகர் சபையின் செயலாளர் ரவி குருசாமி,  அமைப்பின்  முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்,  முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், புரவலர் ஹாசிம் உமர்(டவர் ஹோல் பணிப்பாளர் சபை உறுப்பினர்) தினகரன்/ வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தெ.  செந்தில்வேலவர்,  கொழும்பு 11, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள  கதிரேசன் ஆலய அறங்காவலர் கனக ரகுநாதன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்  ஜோசப் பெர்னாண்டோ, சக்தி தொலைக்காட்சியின் டைரக்டரும் தயாரிப்பாளருமாகிய தினேஷ் கனகராஜ், கலைஞர்களான  தேசபந்து எஸ். குமரேந்திரன், கே.மகேஸ்வரன் சுருதிப் பிரபா, நவகம்புர கணேஷ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இந்த விருதுகளை வழங்கவுள்ளார்கள்.  கலைஞர்களும் சமூக சேவையாளர்களும் இங்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், வருடாந்தம் இவ்வாறான விழாக்களை நடத்தி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கலைஞர்களையும் சமூக சேவையாளர்களையும் இவ்வாறு கௌரவிப்பதுடன் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி வருகின்றது.

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர் கலைஞர் விஜே, கடந்தாண்டு  பாடு நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி கூட்டங்களை நடத்தி வந்ததுடன்,  இந்தாண்டு நடைபெறும் இவ்விழாவில் பத்து கலைஞர்களுக்கு பாடு நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவாக பத்து விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

Comments