எண்ணங்களை பொறுத்தே | தினகரன் வாரமஞ்சரி

எண்ணங்களை பொறுத்தே

அது ஒரு வெயில் காலம். மதிய வேளையில் வெயில் தாக்கம் மற்ற நாட்களை விடவும் உக்கிரமாக இருந்தது. தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஒருவர் சாலை வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார். வழி நெடுகிலும் மரம் ஒன்று கூட இல்லை. தூரத்தில் ஒரு மரம் அந்த வாலிபன் கண்ணுக்கு தெரிய வந்தது.  சரி சற்று ஓய்வெடுத்து செல்லலாம் என மரத்தை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினான்.

மரத்தை நெருங்கியதும் இதமான சூழல் நிலவியது. உட்கார்ந்து இருந்த அந்த வாலிபர் சற்று தலையை மரத்தின் மீது வைத்து கண்ணை மூடினார். அப்பொழுது அந்த வழியாக ஒரு முப்பது வயது தக்க மனிதன் கடந்து செல்கிறார். வியர்வையால் நனைந்து அழுக்காயிருந்த சட்டை பார்த்து பகல் பொழுதே குடித்து விட்டு தூங்குறத பாரு என்று மனதிற்குள் நினைத்தவாறு சென்றான்.

அதன் பின்னால் வந்த மற்றொரு வாலிபர் அவரின் அயர்ந்த தூக்கத்தை பார்த்து வேலைக்கு செல்லாமல் வந்து மரத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று மனதில் எண்ணியவாறு கடந்து சென்றார். அப்பொழுது அதே வயது மதிப்புடைய வாலிபர் அங்கே வந்து மரத்தின் அடியில் அமர்ந்தார். உறங்கிக் கொண்டு இருப்பவரை பார்த்து தன் உழைப்பின் அசதியை போக்க தூங்கிக் கொண்டு இருக்கிறான் பார் என்று அவரை எழுப்பாமல் கடந்து சென்றார். இவ்வாறு தான் நம் அனைவருடைய எண்ணங்களும். நம் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ, அதே தான் மற்றவர் மீது நம் பார்வையை வைக்கும் போது, நினைக்கும் போது, பேசும் போது வெளிப்படும்.

Comments