உணவுப்பொருள் பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது! | தினகரன் வாரமஞ்சரி

உணவுப்பொருள் பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது!

உணவுப் பாதுகாப்பு குறித்து இலங்கையில் சமீப தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. உணவுப் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுமென்று அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்ததையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 இவ்வாறான நிலையில், அண்மைய தினங்களாக திரிபோஷ சத்துணவில் நச்சுப்பொருள் அதிகளவில் காணப்படுவதாக சர்ச்சையொன்று உலவி வருகின்றது. குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் சத்துணவாக வழங்கப்படுகின்ற திரிபோஷவில் நச்சுத்தன்மை காணப்படுவதாக சர்ச்சை பரவியதும், மக்கள் பலர் அச்சத்துக்கு உள்ளாகினர்.

 ஆனாலும் அந்தச் சர்ச்சைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. நாட்டில் விநியோகிக்கப்படுகின்ற திரிபோஷ தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைப் பார்க்கிலும் அதிகளவான ‘அஃப்லோடொக்சின்’ என்ற இரசாயனப் பொருள் கிடையாதென்பதை திரிபோஷ நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே இதுபற்றி வீணான சந்தேகம் இனிமேல் அவசியமற்றது.

 திரிபோஷவில் அளவுக்கதிகமான இரசாயனப் பதார்த்தம் உள்ளதாக வதந்தி பரவியதும் சமூகஊடகங்களுக்கு சிறந்ததொரு தீனி கிடைத்து விட்டது. ‘சமூகஊடகப் போராளிகள்’ தங்களது விருப்பத்துக்கேற்றவாறு சர்ச்சைகளைப் பரப்பத் தொடங்கி விட்டனர். அவர்கள் திரிபோஷவை மாத்திரமன்றி, அதற்கு நிகராக கடைகளில் விற்கப்படுகின்ற மற்றைய சத்துணவுகளையும் விட்டுவைக்கவில்லை.

அவை அனைத்திலுமே நச்சுப்பதார்த்தங்கள் உள்ளதாக ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

திரிபோஷவுக்கு நிகராக விற்கப்படுகின்ற உணவுப்பொருட்கள் பற்றியும் செய்திகள் பரவியதால், மக்கள் அச்சமடைந்ததில் தவறில்லை. ஆனாலும் உரிய ஆதாரம் எதுவுமின்றி இவ்வாறு சர்ச்சைக்குரிய வதந்திகளைப் பரப்புவது முறையா என்பதுதான் இங்குள்ள வினா! ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புவதற்கு சமூகஊடகங்கள் களம் அமைக்கின்றன என்பதுதான் உண்மை.

இவ்வாறான நிலையில், திரிபோஷ மீதான அச்சம் நீங்கியுள்ளது. ஆனாலும் அதற்கு நிகராக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஏனைய சத்துணவுப் பொருட்கள் மீதான சந்தேகமும் நீக்கப்பட வேண்டும். அந்த உணவுப் பதார்த்தங்கள் மீது உரிய இரசாயனப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு உண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியடைவர். இதற்கு அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

நாட்டில் மக்கள் மத்தியில் தொற்றாநோய்கள் அதிகரித்துச் செல்வதற்கு உணவுப் பொருட்களில் சேர்ந்துள்ள நச்சு இரசாயனங்களும் காரணமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே எமது அன்றாட உணவுப்பொருட்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிட முடியாது!

அவை அனைத்திலுமே நச்சுப்பதார்த்தங்கள் உள்ளதாக ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

திரிபோஷவுக்கு நிகராக விற்கப்படுகின்ற உணவுப்பொருட்கள் பற்றியும் செய்திகள் பரவியதால், மக்கள் அச்சமடைந்ததில் தவறில்லை. ஆனாலும் உரிய ஆதாரம் எதுவுமின்றி இவ்வாறு சர்ச்சைக்குரிய வதந்திகளைப் பரப்புவது முறையா என்பதுதான் இங்குள்ள வினா! ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புவதற்கு சமூகஊடகங்கள் களம் அமைக்கின்றன என்பதுதான் உண்மை.

 இவ்வாறான நிலையில், திரிபோஷ மீதான அச்சம் நீங்கியுள்ளது. ஆனாலும் அதற்கு நிகராக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஏனைய சத்துணவுப் பொருட்கள் மீதான சந்தேகமும் நீக்கப்பட வேண்டும்.

அந்த உணவுப் பதார்த்தங்கள் மீது உரிய இரசாயனப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு உண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியடைவர். இதற்கு அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.  நாட்டில் மக்கள் மத்தியில் தொற்றாநோய்கள் அதிகரித்துச் செல்வதற்கு உணவுப் பொருட்களில் சேர்ந்துள்ள நச்சு இரசாயனங்களும் காரணமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே எமது அன்றாட உணவுப்பொருட்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிட முடியாது!

Comments