இலங்கைக்கு பெருமை சேர்த்த சன் மேட்ச் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய சூரி ராஜன் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு பெருமை சேர்த்த சன் மேட்ச் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய சூரி ராஜன்

பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக இலங்கை உலகளவில் சவாலுக்குள்ளானது, இருந்தபோதும் அதன் உண்மையான பிரஜைகளில் ஒருவரான தேசமான்ய சூரி ராஜனுக்;கு ரோட்டரி 'மேலான சேவை' விருது வழங்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட 150சிறந்த நபர்களுக்கு வழங்கப்படும் விருதாகும.; 'மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கு' தம்மை அர்ப்பணித்த 1.3மில்லியன் ரோட்டேரியன்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்;. அவர்கள் ஏனையோர் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக உள்ளனர்.

மலைநாட்டின் தலைநகரான கண்டியைச் சேர்ந்த சூரி ராஜன் கண்டி ரோட்டரி கிளப்பின் மரியாதைக்குரிய தொண்டர் ஆவார், அவர் 20.09-.2010இல் இலங்கையின் ரோட்டரி ஆளுநராகப் பதவியேற்றார். பல ஆண்டுகளாக அவர் ரோட்டரி கழகத்தின்; முக்கிய மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்க பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். போலியோ, மலேரியா அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதாகட்டும், சமூகங்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதாகட்டும், ஏழைகளுக்குக் கல்வி கற்பித்தலாகட்டும் அவரது சேவைகள் அளப்பரியவை.. இப்போது ரோட்டரிக்கு நிதி ரீதியாக வழங்கிய பங்களிப்புக்காக ஆர்ச் க்லம்ப் சொசைட்டி எனப்படும் பிரத்தியேக ரோட்டேரியன் சமூகத்தைச் சேர்ந்தவர். ரோட்டரி இன்டர்நேஷனலின் உலகளாவிய விருதை வென்ற ‘கொவிட்-19வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான’ ரோட்டரியின் மத்திய குழுவில் தேசமான்ய சூரி இருந்தார்.

சன் மேட்ச் கம்பனி (பிரைவேட்) லிமிடெட்டின் தலைவர், இலங்கையில் பாதுகாப்பான சூரியா தீப்பெட்டி வர்த்தக நாமத்தை உற்பத்தி செய்கிறார். சூரியா இன்று கண்டியை தளமாகக் கொண்டு ஏற்றுமதி, கல்வி, தொழில்துறை இரசாயனங்கள் இறக்குமதி எனபனவற்றை உள்ளடக்கிய பலதரப்பட்ட வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும் கூட்டு நிறுவனமாகும். தற்போது  ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் மாறியுள்ளது. தனது சாதனை குறித்து பேசிய சூரி ராஜன், இந்த வாழ்க்கையை ஒருமுறை தான் வாழ்கின்றோம்..

Comments