வவுனியா, திருமலை, மன்னார் உட்பட ஏழு நகர சபைகள் மாநகர சபைகளாகின | தினகரன் வாரமஞ்சரி

வவுனியா, திருமலை, மன்னார் உட்பட ஏழு நகர சபைகள் மாநகர சபைகளாகின

நாட்டின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மன்னார் மற்றும் அம்பாறையின் இரண்டு நகரங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நகர சபைகள் கலைக்கப்பட்டுள்ளன.   பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரென்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments