ரஷ்யர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்களை மீட்ட உக்ரைன் படை | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்களை மீட்ட உக்ரைன் படை

ரஷ்யாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைனின் கார்கிவ் நகர பிரதேசமொன்றில் சித்திரவதை அறையொன்றில் சிக்கியிருந்தவர்களில், இலங்கையைச் சேர்ந்த Kupyansk மருத்துவ பல்கலை மாணவர்கள் 07பேர் மீட்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மேலும் தெரிவிக்கையில், 

"கார்கிவ் பகுதியில், ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை நடவடிக்கைகள் தொடர்கின்றன. ரஷ்யர்களின் அனைத்து குற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன, மேலும் அவர்களின் குற்றத்துக்கான சான்று கள் சேகரிக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களின் பொதுமக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட சித்திரவதை கூடங்கள் மற்றும் வளாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்குபொது மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கூட  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, இலங்கையின் ஏழு குடிமக்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் அவர்கள் ரஷ்யப் டையினரால் பிடிக்கப்பட்டனர். பின்னர் ஒரு அடித்தளத்திலுள்ள அறையில் வைக்கப்பட்டனர். 

இப்போது, கார்கிவ் பகுதியின் விடுதலைக்குப் பிறகு, இந்த மக்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிதென்றும் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Comments