மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகள் வாங்க கிரிக்கெட் நிறுவனம் 05 இலட்சம் டொலர் உதவி | தினகரன் வாரமஞ்சரி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகள் வாங்க கிரிக்கெட் நிறுவனம் 05 இலட்சம் டொலர் உதவி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின்அயரா முயற்சியினால் அவசர மருந்து தேவைகளுக்குகிடைத்த பெருந்தொகை  நிதி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5,00,000டொலர்கள் (சுமார் 180மில்லியன் ரூபா) காசோலையை நேற்று முன்தினம் (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.

ஆசிய கிரிக்கெட் கிண்ணம், ஆசிய வலைப்பந்து கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் முகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (16) நடைபெற்ற நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.  

கடந்த காலங்களில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் புற்று நோயாளர்கள் மருந்துப் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.  

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தியது. இதனைக் கருத்திற் கொண்ட ஜனாதிபதி, பிரச்சினையை துரிதமாக ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார். 

Comments