புலிகளின் புதையலை தேடி யாழில் அகழ்வு | தினகரன் வாரமஞ்சரி

புலிகளின் புதையலை தேடி யாழில் அகழ்வு

யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக  நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டு மதியம் 02மணியுடன் நிறுத்தப்பட்டது.

அந்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரசியத் தகவலின் படி புதையலை அகழ்வதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர். 

நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை காலை 10முதல் மதியம் 02மணி வரையில் புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.   புதையல் அகழ்வதற்காக கொழும்பிலிருந்து விசேட அணியினர் வந்திருந்த்துடன் அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும்  பயன்படுத்தப்பட்டன. 

மதியம் 02 மணிவரையில் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போதும், எவ்விதமான பொருட்களும் மீட்கப்படவில்லை. அத்துடன்வெறும் கற்களே கிடைத்தன என்பதால் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

யாழ். விசேட நிருபர் 

Comments