இனிய நந்தவனம் வெள்ளிவிழா மலர் அறிமுகம் இன்று | தினகரன் வாரமஞ்சரி

இனிய நந்தவனம் வெள்ளிவிழா மலர் அறிமுகம் இன்று

இனிய நந்தவனம் வெள்ளிவிழா மலரின் அறிமுக நிகழ்வு இன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். இன்று மாலை 4மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும்.

ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமை தாங்குகிறார்.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக தமிழக தொழிலதிபர் முகம்மது அபுபக்கர் சித்தீக், வீரகேசரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் எஸ். கஜன், தினக்குரல் பிரதம ஆசிரியர் கே.ஆர்.பி. ஹரன், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர், தமிழன் நாளிதழ் வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் எஸ். சிவராஜா,வீரகேசரி செய்திப் பிரிவுப் பணிப்பாளர் ஆர். பிரபாகரன், தினக்குரல் செய்தி ஆசிரியர் வே. கணேசன், தமிழ்மிரர் பிரதம ஆசிரியர் கனகராஜா,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவைப் பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்வர்.

செல்வி இனியவள் காண்டீபன் தமிழ்வாழ்த்துப்பாட, கொழும்பு தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் ஆழ்வார் கந்தசாமி வரவேற்புரையாற்ற, ஞானம் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் தலைமையுரையாற்றுவார்.

கல்வியமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா, கவிஞரும் எழுத்தாளருமான முருகன் சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விந்தினராகக் கலந்துகொள்வர்.

எழுத்தாளரும் ஆய்வாளரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவருமான முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் முதற் பிரதியைப் பெற்றுக்  கொள்வார்.

திருமதி ரஞ்சனி சுப்பிரமணியம் நூல் விமர்சன உரையாற்ற, இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரையையும் நன்றியுரையையும் ஆற்றுவார்.

கலைஞானச்சுடர் சுபாசினி பிரணவன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார். கலாபூஷணம் பொன்னுத்துரை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்வார்.

 

 

Comments