ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தை காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தையான எல்.எச். கிரீசி சில்வா காலமானார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) முன்னாள் தலைவரும், மறைந்த திருமதி சுமணா சில்வாவின் கணவருமான கிரீசி சில்வா (Creasy Silva) மரணிக்கும் போது 93 வயதாகும்.

மறைந்த கிரீசி சில்வா இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் 1989 - 1993 வரை இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

அவரது பூதவுடல் தற்போது இல. 10, ராகுல மாவத்தை, M.C. வீதி, மாத்தளை எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (15) பி.ப. 4.30 மணியளவில் மாத்தளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments