இலங்கையில் Walton வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்தியுள்ள Softlogic | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் Walton வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்தியுள்ள Softlogic

Softlogic Holdings PLCயின் முழுமையான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Softlogic Retail Pvt Ltd நிறுவனமானது இலங்கையின் முன்னணி நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் தளபாட சில்லறை வலையமைப்புக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், அண்மையில் உலகப் புகழ்பெற்ற பல்தேசிய நுகர்வோர் இலத்திரனியல் வர்த்தகநாமமான Walton உடன் இணைந்து Walton வர்த்தகநாம தொலைக்காட்சி சாதனங்களை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  

Walton என்பது ஒரு முன்னணி இலத்திரனியல் சாதனங்கள் வர்த்தகநாமமாகும். இது ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை உள்ளடக்கிய 40க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது.

இலங்கையில் வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்துவது Walton இன் சாதனை இலக்குகளில் ஒன்றாக உள்ள “Go Global 2030” என்ற இலக்கை அடைவதற்கும் 2030ஆம் ஆண்டளவில் சிறந்த இலத்திரனியல் வர்த்தகநாமங்களில் ஒன்றாக மாறுவதற்கும் வழிவகுக்கும். ஆரம்ப கட்டத்தில் Softlogic நிறுவனம் Walton 32அங்குல LED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒரு வலுவான தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெகுஜன சந்தைப் பிரிவை இலக்காகக் கொண்டு இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இது விரைவில் பெரிய திரை LED தொலைகாட்சிகளுக்கும் நீட்டிக்கப்படும். Walton 32-அங்குல LED தொலைகாட்சி உயர் பிரிதிறன் (High Definition - HD) தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது. இது புதிய பாணியிலான ஒடுக்கமான சாய்வு வடிவமைப்புடன் பார்வையாளர்களுக்கு உயர் தரமான பட அனுபவத்தை வழங்குகிறது. இது தயாரிப்புக்கு ஒரு ஒப்பனை அழகியல் தோற்றத்தை சேர்ப்பிக்கிறது.

நாடு முழுவதும் அமைந்துள்ள 200 க்கும் மேற்பட்ட Softlogic மற்றும் Softlogic MAX காட்சியறைகளிலும், Softlogicஇன் மின்-வர்த்தக தளமான www.mysoftlogic.lk இலும் தயாரிப்பு கிடைக்கும். 

Comments