காத்திருந்த கண்கள் | தினகரன் வாரமஞ்சரி

காத்திருந்த கண்கள்

அன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாள் என்பதால் விஜி இன்னும் கூட படுக்கையை விட்டெழும்பவில்லை. அவள் அம்மா தேநீர்க் கோப்பையுடன் அவளருகில் வந்து “விஜியம்மா நேரமாகல்ல இன்னுமா தூக்கம் வருது" உங்கப்பாவும் எழும்பி குளித்து முடித்து சந்தைக்குப் போக தயாராகிட்டார்..” என்றாள்.

“ஓ மை கோர்ட்" நல்லாவே தூங்கிட்டேன்.” என்றவள்  துள்ளிக் குதித்தெழுந்து தேனீரைப் பருகிக் கொண்டே “மம்மீ இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்றாள். பின்னர் அம்மாவை கட்டிப்பிடித்து “இச்” சென அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு குளியலறையை நோக்கி புள்ளிமானாய் துள்ளி ஓடினாள்.

விஜி இருபது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இளநங்கை. பணக்கார வீட்டுச் சீமாட்டி. பரமசிவம் பாக்கியவதி தம்பதிகளின்; ஒரே பிள்ளை. கல்யாணம் முடித்து ஐந்து வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இன்றி கோயில் கோயிலாக பிரார்த்தனை பண்ணியதன் பலனாய் விஜி பிறந்தாள்.

அவள் சுதந்திரப் பறவை போல் பறந்து திரித்தாள். மூன்று தலைமுறைக்கு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சொத்து சுகம் இருந்தாலும் தொழில் செய்ய அவள் ஆசைப்பட்டாள். தந்தையின் செல்வாக்கில் தனியார் நிறுவனமொன்றில் தட்டெழுத்தாளராய் பதவி பெற்றுக் கொண்டாள். அவளை ரசிக்கும் அலுவலக ஆண்களில் சதீஸ{ம் ஒருவர்.

சதீஸ் அதே நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் விற்பனைப் பிரதிநிதியாக தொழில் பார்த்தான். ஆரம்பத்தில் தொழில் ரீதியாக இருவரிடத்திலும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாய் மலர்ந்து மணம் வீசியது. அலுவலக விடுமுறை நாட்களில் வெளியே சுற்றித் திரிந்தார்கள். இதுபோல் அன்றும் ஒரு விடுமுறை நாளாய் இருந்தது.

காலை வேளையிலேயே குளித்து முடித்து விலையுயர்ந்த சாரியொன்றை உடுத்திக் கொண்டு காலை உணவுக்கு வந்தபோது அம்மா சிடுசிடுத்தாள். ஆனால் “அவ போயிட்டு வரட்டுமே தொந்தரவு கொடுக்காதே” என்று அப்பா அவளுக்காக பரிந்து சொன்னபோது “தேங்ஸ் டெடீ, குட் பாய் மம்மீ” என்று கூறிவிட்டு சிட்டாய்ப் பறந்து  அந்தப் பூங்காவின் நுழைவாயிலில் நுழைந்த போது, அவளுக்காக காத்திருந்த சதீஸ் “வெல்கம் டார்லிங்". என வரவேற்றான்.

 அவள் கரத்தைக் கோர்த்துக் கொண்டு நடந்த போது அந்த பூங்கா வனத்தில் இவர்களும் பூக்களாய்ப் பரிணமித்தார்கள். அங்கே காணும் இடமெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலர்கள் சங்கமித்திருந்த போது, சதீஸின் உள்ளமும் அந்த நிலமைக்கு ஆளாக துடித்தது. அந்த பரந்த பூங்காவில் அவனுக்கென பிடித்திருந்த அடர்ந்த பூஞ்செடிகள் காணப்பட்ட அந்த இடத்துக்கு அவளை கூட்டிச் சென்றான்.

 அவன் நோக்கம் புரியாது எவ்வித சலனமுமின்றி வெகுளியாய் அவளும் அந்த இடத்தில் அமர்ந்த போது, அவனும் அவளை நெருங்கியே அமர்ந்து கொண்டான். அவள் கையை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொண்டான். அவள் மெய் சிலிர்த்தாள். பின் அவள் கரத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் சட்டென்று கைகளை இழுத்துக் கொண்டு விலகினாள். “ஏன் விஜி" பிடிக்கலையா?”.. “இல்லை என்னைக் கல்யாணம் செய்துக்குருவீங்களா” என்றான் பளிச்சென்று.  “எம்மேல இன்னுமா நம்பிக்கை இல்ல?”  என அவன் வழமைபோல கேட்டபோது “நிறையவே இருக்குது" ஆனா.. ஆனா” என இழுத்தாள். “அப்போ ஏன் பயப்பிடுற?” என்றவன், அவளை இழுத்து தன்னோடு சேர்ந்து இருக்கமாய் அனைத்துக் கொண்டான். அவன் அணைப்பிலிருந்து விலகவும் முடியாது" விலகவும் விரும்பாது அவள் அடங்கிப் போனாள். அவள் கைகள் தைரியம் பெற்றன.

 அவளின் லேசான தயக்கங்கள் முறியடிக்கப்பட்டன. அவளும் கூட முழுக்க முழுக்க அவனுடைய ஆளுமையில் இருந்தாள். அந்த அழகிய பூங்காவனத்தில் வண்ண வண்ண பூக்கள். தேன் உண்ணும் வண்டுகளின் ரீங்காரம் ஏதோ ஒரு புதிய இசை விருந்தை படைப்பது போலிருந்தது. சதீஸ{க்கும் விஜிக்கும் அந்த இசைவிருந்து இன்பமூட்டியது.

இதுபோல் பல தடவைகள் அவர்களின் சந்திப்புக்கள் மலர்களோடு மலர்களாக சங்கமித்தன. சதீஸ் விரும்பாத சந்தர்ப்பங்களில் கூட விஜி அவனைக் கட்டாயப்படுத்தி இன்பத்தில் மூழ்கினாள். ஆனால் அவள் இன்பத்திற்கு வெகு விரைவாக காலம் தடைபோட்டது. இன்பத்தின் விளைவுகளை இயற்கை அவளுக்கு உணர்த்தியது. அவளுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அவள் எதற்கும் அஞ்சாமல் தன்போக்கிலே போய்க் கொண்டிருந்தாள்.

அன்றும் வழமை போல அலுவலகத்தில் கடமையில் இருக்கும்போது அவளுக்கு லேசாக தலை சுற்றுவது போலிருந்தது. தொடர்ந்து சோர்வு, மயக்கம், குமட்டல் என்று தொடர்ந்து கொண்டிருந்தது. 

அவள் செய்வதறியாது தவித்தாள். ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டு சதீஸ{க்கு தொலைபேசி அழைப்பெடுத்தாள். அவன் தொழில் விடயமாக வேறூர் போயிருப்பதாக தகவல் கிடைத்தது. வேறு வழியின்றி தோழி ஒருத்தியின் உதவியோடு பெண் டொக்டர் ஒருவரை நாடினாள்.

அவளை பரிசீலித்த டொக்டர் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “உங்க ஹஸ்பெண்டும் வந்திருக்காரா?” என்று கேட்டார். அவள் தடுமாறிப் போனாள். “என்ன டொக்டர் சொல்றீங்க" எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல.

“அவள் கூறியதைக் கேட்ட டொக்டர் ஆச்சரியம் மேலிட “அப்போ எப்படியம்மா நீ கர்ப்பமாகியிருக்க முடியும்?” என்றதும் அவள் அதிர்ந்து போய் மயக்கமுற்றாள்.

அவள் மீண்டும் சுய நினைவுக்கு திரும்பி கண்விழித்து பார்த்தபோது மருத்துவமனை கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள். “இப்ப என்னடீ செய்யப்போற.. உங்க வீட்டுக்கு கோல் போட்டு விசயத்த சொல்லிடவா?..”

“வேணாம்.. வேணாம் கொஞ்சம் பொறு” என்று அவள் சதீஸின் மொபைளுக்கு கோல் எடுத்தாள். அதுவும் இயங்கவில்லை. அதற்கிடையில் டொக்டரும் வந்துவிட்டார்.

“என்னம்மா இவங்க வீட்டுக்கு விஷயத்தைச் சொல்லிட்டீங்களா?” தோழி அசடுவழிய.. “இன்னும் இல்ல டொக்டர்” என்றதும். “ஏன் என்னை டிஸ்சார்ச் பண்ண மாட்டீங்களா?” என விஜி வியப்போடு கேட்கவும்

“எப்படியம்மா முடியும்.. ஹை பிரஷர், ஹாட் வேற வீக்.. ரெண்டு மூனு நாளாகுமே..” என்றார் மருத்துவர்.

“விஜி உங்க வீட்டு நம்பரைக் கொடு” என்று தோழி கேட்கவே வேறு வழியின்றி அவளும் கொடுக்க, தோழி, வீட்டுக்கு விடயத்தைத் தெரிவித்தாள். சற்று நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பதறி அடித்துக்கொண்டு வந்தார்கள். “என்னம்மா.. என்ன ஆச்சு?” பெரிசா ஒன்னும் இல்லபா பயப்படாதீங்க" சாதாரண காய்ச்சல் தான்”.

 “டாக்டரை சந்திக்கவா..” “வேணாமப்பா எல்லா சரியாயிடும்”

இரண்டு நாட்களில் அவள் உடல் தேறியது. மருத்துவமனையில் இருந்து நேராக சதீஸின் அலுவலகத்துக்குப் போனாள். அங்கு அவன் இருக்கவில்லை. கையடக்க தொலைப்பேசியும் இயங்கவில்லை.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு வழியின்றி வீட்டை அடைந்தாள். பெற்றோரிடம் உண்மையைச் சொன்னதும், அப்பாவும் அம்மாவும் கலங்கிப் போனார்கள்.

“சரி நடந்தது நடந்து போச்சு" அந்தப் பையனுக்கே கட்டி வச்சுடலாம்” என்ற முடிவோடு சதீஸை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தார்கள்.

எப்படியோ விடயத்தை தெரிந்து கொண்ட சதீஸ் தலைமறைவாகிவிட்டான். “விஜி என்னம்மா செய்யிறது. பேசாம கருவைக் களைச்சுடுவோமா” என்ற பெற்றோரின் முடிவை திராகரித்த விஜி,

 “வேணாம்பா.. அவன் எங்க போயிடுவான்.. என்னைக்காவது மாட்டாமலா போயிடுவான். என்னவானாலும் சரி, இந்தப் புள்ளைக்கு நான்தான் தகப்பன்னு ஒருநாள் என் காலில விழத்தான் போகிறான். அதுவரை என் வயிற்றில் சுமந்த இந்த சிசுவை பெற்று வளர்த்து பெரிய ஆளாக்காமல் நான் விடமாட்டேன்.. அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒத்தாசையாக இருந்தாப்போதும்” என்று கூறி முடிக்க அவர்களுக்கும் அது சரியெனப் பட்டது.

மாதங்கள் பத்து வேகமாக கடந்து சென்றிருந்தன. விஜி ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் அப்பாவும் அம்மாவும் எல்லாம் ஆண்டவன் செயல் என்று இறைவன் மீது எல்லா பாரத்தையும் போட்டுவிட்டு காலத்துக்காக காத்திருந்தார்கள்.

இப்போதெல்லாம் விஜி தொழிலுக்கும் போகாமல் தன் பிள்ளையை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தாள். பிள்ளை சுதனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து பெரியவனான். அவனை நல்லதொரு உயர்தரப் பாடசாலையிலேயே கல்வி கற்க அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அவள் அலுவலகம் புறப்பட்டாள்.

அவள் அப்பாவும், அம்மாவும் எல்லா விசயத்திலும் அவளுக்கு ஒத்தாசையாகவே இருந்தார்கள். மகன் சுதனும் விறு விறுவென வளர்ந்து கல்வியிலும் சிறந்து விளங்கி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்துக்கு தெரிவானான். விஜிக்கும் அவள் பெற்றோருக்கும் எல்லையில்லா ஆனந்தம்.

வருடங்கள் வேகமாக உருண்டோடின. சுதன் இப்போது ஒரு மருத்துவர். தன் அம்மாவையும், தாத்தா, பாட்டியையும் தான் கடமைப் புரியும் அந்த வைத்தியசாலை அமைந்துள்ள நகரப் பகுதிக்கே கூட்டிச் சென்று ஒரு பிரமாண்டமான வீடொன்றில் குடியேற்றினான்.

ஒரு நாள் தன் வீட்டுக்கு முன்னால் “அம்மா பசிக்குது ஏதாவது சாப்பிட இருந்தா தாங்க" உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்” என்று யாரோ யாசகம் கேட்பது போல் இருந்தது. “யாரென்று தெரியல்ல பாவம்” என்று எண்ணிக் கொண்டே விஜி வாசல் கதவை திறந்தாள்.

அங்கே பரட்டைத் தலையோடும் முகமெல்லாம் தாடி, கிழிந்த கந்தல் உடைகளோடும் ஒரு யாசகன் அங்கே நிற்பதைக் கண்டாள்.

ஒரு கால் இல்லாததால் ஊன்றுகோலின் துணையோடு நின்று கொண்டிருந்தான். விஜிக்கு அவனைப் பார்க்க ரொம்பவும் பாவமாக இருந்தது.

“இருப்பா வாரேன்” என்று வீட்டுக்குள் ஓடியவள் “அம்மா"அம்மா.. யாரோ ஒரு பிச்சைக்காரன். "பார்க்க பாவமா கெடக்கு" ஏதாவது சாப்பாட பார்சல் பண்ணுங்க. நான் சுதனுடைய பழைய உடுப்புகள் எடுத்துக்கொண்டு வாரேன்” என்றாள்.

சற்று நேரத்தில் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியில் போய் அந்த யாசகனிடம் நீட்டும் போது, அவன் இவளை உற்று நோக்கினான்.

“நீங்க.. நீ... நீ விஜி இல்ல விஜி என்னை உனக்கு ஞாபகம் இல்லையா" நான் தான்நான்தான்” என்றவன் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், அந்தக் குரலை எங்கேயோ கேட்ட ஞாபகமும் இருந்தது. உடனே அவனை வீட்டு வேலையாட்களின் துணையோடு சுதன் வேலை செய்யும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றாள். மகனிடம் நடந்தவற்றைக் கூறினாள். அந்த யாசகனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பரிசோதனை செய்தார்கள். விஜியும் சுதனும் அவன் பக்கத்திலேயே நின்றார்கள். சற்று நேரத்தில் அவனுக்கு நினைவு திரும்பியது. அவன் கண்கள் விஜியின் முகத்தையே உற்று நோக்கின.

 “விஜி என்னத் தெரியல்ல" நான் தான் சதீஸ்” என்றதும் அவளும் திடுக்கிட்டாள். அவளுக்கும் தலைசுற்றுவது போல் இருந்தது. சுதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“விஜி" உனக்கு நான் செய்த துரோகத்துக்கு என்னை ஆண்டவன் நல்லாவே தண்டிச்சுட்டான். இந்த இறுதி நேரத்திலாவது உன்னை சந்திக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லுறேன்..” அவன் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான். ஆனால் விஜியின் காதுகளுக்குள் அவை எதுவுமே நுழையவில்லை. அவள் பிரமை பிடித்தவள் போல் அப்படியே சிலையாய் நின்றாள்.

“டொக்டர் என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க. ஒரு உத்தமிக்கு நான் செய்த துரோகத்துக்கு பிராயசித்தமா இன்னும் என் வாழ்க்கையில் என்னென்ன அனுபவிக்க இருக்கோ தெரியல்ல".

இந்த உயிர் இந்த உடம்பை விட்டு போகும் வரை அதையெல்லாம் சந்தோஷமா அனுபவிக்கணும்.. என்னை விட்டுடுங்க" உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்" உங்கள் காலில விழுந்து வணங்குவதாக எண்ணி என்னை விட்டுடுங்க” என்று கதறினான் சதீஷ்.

“அவர் டாக்டர் இல்ல" உங்க மகன் "உங்க மகன்” விஜி பேச எத்தனித்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவள் சுதாகரித்துக் கொண்டு “எல்லா விசயங்களையும் வெளியில் போய் பேசிக்கலாம்.. முதல்ல அவரை டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போவோம்..” விஜி சொல்ல மகனும் செய்தான். அந்த மனிதரை கைத்தாங்கலாகப் பிடித்து தன் காரிலே ஏற்றிக் கொண்டான். உடன் விஜியும் ஏறிக் கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் இருவரும் கைதாங்களாக சதீஸை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். அவன் பிரமித்துப் போனான். “இது டொக்டர் வீடா?” என்றதும்.

“அவர் டாக்டர் இல்ல" என் அன்பு மகன்" நம்ம அன்பு மகன்” அவன் ஆச்சரியம் மேலிட சுதனை பரிவோடு தொட்டுத் தழுவினான்.

கண்ணீர் ஆறாகப் பெருகியது. “என் மகனின் தந்தையை என்றாவது இந்த உலகுக்கு காட்டு ஆண்டவனே” என்று இறைவனிடம் நான் தினமும் வேண்டுவேன். என் பிரார்த்தனை வீண் போகவில்லை.”

விஜி அப்படிக்கூற சதீஸ{ம் சுதனும் ஆளுக்கு ஆள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டார்கள். “இவரோ என் அப்பா அப்பா..” அவன் அடிப்படியே சதீஸை கட்டி அணைத்துக் கொண்டான். அந்த வீடே அன்று மங்களகரமாய் காட்சி அளித்தது.

பசறையூர்
ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments