கேகாலையில் கோர விபத்து | தினகரன் வாரமஞ்சரி

கேகாலையில் கோர விபத்து

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் ​ேககாலை ரன்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். விபத்தில் மற்றுமிருவர் படுகாயமடைந்துள்ளனர்.  

கொழும்பு பிரதான வீதியில் 76ஆம் கிலோ மீற்றரில் உள்ள ரன்வல பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு (09) 10.30மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்ற வேன் எதிரே கேகாலையிலிருந்து நாங்கல்ல நோக்கி வந்த 03மோட்டார் சைக்கிள்களுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  

03மோட்டார் சைக்கிள்களிலும் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ளனர். இவர்களுள் மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 03இளைஞர்களும் 27வயது உடையவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

இலக்கம் 408அப்துல் காதர் மாவத்தை நாங்கல்ல, துல்ஹிரிய முகவரியைச் சேர்ந்த முகம்மது மிஹ்லார் முஹம்மது மிப்ராஸ்.  

பெரலிவத்த, மங்கெதர, துல்ஹிரிய முகவரியைச் சேர்ந்த ரகுமான் முகமட் ரஹீம், நாங்கல்லயைச் சேர்ந்த மல்கான் அபுல் ஹஸன் முஹம்மது மனாஸிர் கான் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  

வேனின் சாரதி கொலன்னாவை வீதி தெமட்டகொடை கொழும்பு என்ற முகவரியைச் சேர்ந்த அப்துல் காதர் அப்துர் ரஹ்மான் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வரக்காப்பொலை தினகரன் நிருபர்  

Comments