பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட பெற்றோல் | தினகரன் வாரமஞ்சரி

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட பெற்றோல்

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பெரும்  தட்டுப்பாடு நிலவி வருகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் நடைமுறைகளாலும் எரிபொருள் வரிசைகள் இன்று வரை ஓரளவு குறைந்து வருகிறது.

யாழில். கிராம உத்தியோகத்தரின் பிறந்த நாளுக்கு ஊர்ப் பொதுமக்கள் இணைந்து பெற்றோலைப் பரிசாக வழங்கிய சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஜே / 363கிராம உத்தியோகத்தரின் பிறந்தநாள் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போதே இவ்வாறு பிறந்தநாள் பரிசாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை , மேற்படி கிராம உத்தியோகத்தரின் பணிகளை இடையூறின்றி மேற்கொள்ளும் பொருட்டே பிறந்தநாளில் பெற்றோல் வழங்கியதாக இங்கு குறிப்பிடத்தக்கது .

Comments