நாளை நள்ளிரவு முதல் Gas விலைகள் குறைப்பு | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

நாளை நள்ளிரவு முதல் Gas விலைகள் குறைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைவடையும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கையில்: 

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அதேவேளை கடந்த 20 தினங்களில் 22 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ச்சியாக சமையல் எரிவாயுவை விநியோகித்து வருவதாக தெரிவித்துள்ள அவர் தினமும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Comments