துவிச்சக்கர வண்டிகளின் பாவனைக்கு தனியான வழி | தினகரன் வாரமஞ்சரி

துவிச்சக்கர வண்டிகளின் பாவனைக்கு தனியான வழி

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் துவிச்சக்கர வண்டிகளின் பாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு வீதிகளில் துவிச்சக்கரவண்டிகளுக்கென தனியான வீதி ஒழுங்கையை அமைக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக நேற்று கொழும்பு இலங்கை வங்கி அவென்யூவில் பாதசாரிகளுக்கு தனியான பாதை திறந்து வைக்கப்பட்டது.

துவிச்சக்கர வண்டிகளை தரித்து வைக்கவும் பாதுகாப்பான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தையிலும் துவிச்சக்கரவண்டி பாதைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Comments