திருச்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் ஹைக்கூ மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

திருச்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் ஹைக்கூ மாநாடு

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதை தமிழ்நாட்டில் கால்பதித்து ஒரு நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில் ஹைக்கூ கவிதைகளுக்கான முதல் தமிழ் ஹைக்கூ உலக மாநாடு திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ், இனிய நந்தவனம் மாத இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய மாநாட்டை கல்வியாளர் செளமாராஜரத்தினம் தொடங்கிவைத்தார்

திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டு நிறைவுரையாற்றினார்

"ஒரு ஹைக்கூ கவிதை எழுதுபவனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்றால் உலகில் இருக்கும் எல்லா மனிதர்களின் மனநிலையிலிருந்தும் வேறுபட்டிருக்கும் இந்த உலகத்தை பார்க்கின்ற பார்வையும் மற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பும் மகிழ்ச்சியும் வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ஹைக்கூவை எங்கோ யாரோ சொன்னது இன்றுவரையில் மனதில் நிற்கிறது ஒரு நல்ல ஹைக்கூ கவிதையை படிக்கும்போது அதிலிருந்து தொடர்ச்சியாக இன்னொரு கவிதை ஞாபகத்திற்கு வந்து அப்படியே ஹைக்கூ பயணம் தொடரும்.

நான் சென்னைக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற உந்துதலைத் தந்தது மூன்று வரியில் எழுதிய ஹைக்கூ கவிதைதான். என்னை இந்த உயரத்திற்கு உயர்த்தியதும் எனது வெற்றி தோல்வியில் மனதை சமநிலையில் வைத்துக்கொள்வதும் இந்த ஹைக்கூ கவிதைகள் மட்டும்தான் ஒரு நல்ல கவிதை எழுதவேண்டுமானால் கட்டாயம் இருக்கக்கூடாது அதற்காக மெனக்கட கூடாது அது இயல்பாக அமையவேண்டும் ஹைக்கூ கவிதை எழுதுவதைவிட உணரும்போதுதான் முழுமையடைகிறது.

என்று இயக்குநர் என்.லிங்குசாமி நிறைவுரையில் குறிப்பிட்டார். கவிஞர் தங்கம்மூர்த்தி மாநாட்டு சிறப்புரையாற்ற கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் மு.முருகேஷ் ஹைக்கூ மாநாட்டின் நோக்கத்தயும் பயணத்தையும் குறிப்பிட்டு உரையாற்ற

கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் மாட்டை ஒருங்கிணைத்து ஏற்புரை நிகழ்தினார் மாநாட்டில் "தூண்டில் " ஹைக்கூ சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

கிருஷாந்தினி

Comments