அதிகம் விரும்பப்படும் வர்த்த நாமமாக நான்காவது தடவையாகவும் பஜாஜ் | தினகரன் வாரமஞ்சரி

அதிகம் விரும்பப்படும் வர்த்த நாமமாக நான்காவது தடவையாகவும் பஜாஜ்

மிகவும் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமாக' பஜாஜ்நான்காவது வருடமாகவும் தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன், எல்எம்டி - பிரான்ட் பினான்ஸ் 2022அதாவது 19வது வருடாந்த மதிப்பாய்வில் இலங்கையிலுள்ள 50முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது.

'கடந்த இரண்டு வருடங்களாக புதிய மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்திலும் சிறப்புத்தன்மை, விற்பனைக்குப் பின்னரான சேவைக்கான அணுகல் போன்ற பிரதான விடயங்கள் உள்ளடங்கலாக வர்த்தக நாமம் தொடர்பில் எமது 360பாகை அர்ப்பணிப்புக் காரணமாக 'மிகவும் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்' என்ற தலைப்பை பஜாஜ் தக்கவைத்துக்கொண்டுள்ளது' என டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (வாகன விற்பனை) லக்மல் டி சில்வா தெரிவித்தார்.

புத்தம் புதிய மோட்டார் சைக்கிளுக்கான வர்த்தக நாம விசுவாசத்தைக் கொண்ட பஜாஜ் வாடிக்கையாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், வாகன உற்பத்தி/ ஒருங்குசேர்த்தல் தொழில்துறை மற்றும் வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழில்துறைக்கு கைத்தொழில் அமைச்சினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் உள்நாட்டில் பெறுமதி சேர்க்கப்பட்ட CT100மோட்டார் சைக்கிள்களை மீள அறிமுகப்படுத்தியிருந்தது.

பஜாஜ் குடும்பத்தில் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான பஜாஜ் CT100, அதன் எரிபொருள் திறன், நீடித்துழைப்பு மற்றும் செயல்திறனுக்காக புகழ்பெற்றிருப்பதுடன், இது தற்போதைய பொருளாதார சூழலில் சிறந்த வாகனமாகவும் உள்ளது.

Comments