துவிச்சக்கர வண்டியில் சென்று அரசியல் செயற்பாடுகள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

துவிச்சக்கர வண்டியில் சென்று அரசியல் செயற்பாடுகள்

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Kajendran) துவிச்சக்கரவண்டி மூலமாக தனது அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து வருகின்றார்.

செல்வராஜா கஜேந்திரன் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போது மோட்டார் வாகன பயணங்களை நிறுத்தி விட்டு துவிச்சக்கர வண்டிக்கு மாறி வருகின்றனர்.

இந்தவொரு நிலையில் யாழில் துவிச்சக்கர வண்டிகள் 30 ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபா வரை விற்பனையாகி வருகின்றது.

Comments