பப்பாளி - ஏழைகளின் அப்பிள் | தினகரன் வாரமஞ்சரி

பப்பாளி - ஏழைகளின் அப்பிள்

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. அப்பிள் கிலோ 1500ரூபாய்க்கு மேலே விற்கப்படுகிறது. அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ 240ரூபாவாகும். பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது. 

பழங்களில் மிகமிகக் குறைவான கலோரி பப்பாளியில் தான். 100கிராம் பப்பாளியில் 32கலோரிகளே உள்ளன. அப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். 

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் ஆரோக்கிய மரம் என்றும் பழத்தை ஆரோக்கிய பழம் என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து விட்டமின் சத்துகளும் அடங்கியுள்ளன. அதில் போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின் - சி அதிகளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம், இதிலுள்ள 'பொப்பின்' எனப்படும் புரதச்சத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும். 

என். வினோமதிவதனி, 
லுனுகலை.  

Comments