கன்னியா வெந்நீரூற்று | தினகரன் வாரமஞ்சரி

கன்னியா வெந்நீரூற்று

கன்னியா வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று இன்று வரை தனித்துவமாக மிளிர்கின்றன. 

கிழக்கு மாகாண திருகோணமலையில் இந்த வெந்நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. திருகோணமலை நகரில் இருந்து 3.9கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வெந்நீரூற்று இக்கிணறுகள் 90தொடக்கம் 120சென்ரி மீற்றர் ஆழமுடையவையாகும். 

சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் இவையும் பிரதான இடத்தை பிடித்துள்ளன. இவற்றின் சிறப்பம்சம் யாதெனில், ஒவ்வொரு கிணறும் வெவ்வேறு வெப்பநிலையுடன் விளங்குவதோடு எப்பொழுதுமே இவற்றில் நீர் வற்றுவதே இல்லை.  

இத்தகைய சிறப்புக்களைக் கொண்டு விளங்குவதால், இப்பகுதியை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர். இந்த வெந்நீரூற்றுக்களை பார்வையிடவும் மற்றும் இவற்றில் நீராடுவதற்கும் கட்டணமுறைப்படி அனுமதிகள் வழங்கப்படுகின்றன.  மேலும் இந்த ஏழு கிணறுகளிலும் நீராடுவதினால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளுர்வாசி மக்களிடையே நிலவி வருகின்றது. ஒவ்வொரு கிணறுகளும் 3மற்றும் 4அடி ஆழம் உடையவையாகும். அத்துடன் இப்பகுதியை சூழ விகாரையும் கோயிலும் காணப்படுவதால், இங்கு அமைதி கட்டாயமாகப் பேணப்படுகின்றது. ஒவ்வொருவரும் நிச்சயமாக சென்று பார்வையிட வேண்டிய இடங்களில் இந்த ஏழு வெந்நீர் கிணறுகளும் முக்கியமானவையாகும். 

 

Comments