ரயில் மேடைக்கிடையில் வீழ்ந்த இளைஞன் பலி | தினகரன் வாரமஞ்சரி

ரயில் மேடைக்கிடையில் வீழ்ந்த இளைஞன் பலி

மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த சாகரிகா ரயிலில் இந்த இளைஞன் ஏற முற்பட்டபோது ரயிலுக்கும் நடைமேடைக்குமிடையில் வீழ்ந்துள்ளார். 

அதில் சிக்கிய இளைஞனை வெளியே எடுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இருப்பினும் இளைஞனை உயிருடன் மீட்க முடியவில்லை.   உயிரிழந்தவர் திக்வெல்ல வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த ருசர விதானகே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments