நாடளாவிய ரீதியில் இன்று முதல் எரிவாயு விநியோகிக்க முடிவு | தினகரன் வாரமஞ்சரி

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எரிவாயு விநியோகிக்க முடிவு

நாடு முழுவதும் இன்று  முதல் மீண்டும் சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடற்பகுதியில் கடந்த 07நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதையடுத்தே லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 

அத்துடன் 3.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 20 மில்லியன் ரூபா தாமத கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

Comments