டீசல் பெற வரிசையில் நின்ற பஸ் திருட்டு | தினகரன் வாரமஞ்சரி

டீசல் பெற வரிசையில் நின்ற பஸ் திருட்டு

ஹோமாகம, கலவிலவத்தை பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்சொன்றை  இரு மாணவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 15வயது இரு பாடசாலை மாணவர்களை சந்தேகத்தின் பேரில் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களென பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ் ஹோமாகமவில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பஸ்ஸின் சாரதி வயது குறைந்தவரென்பதை அங்கிருந்த ஒருவர் அவதானித்து அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா? எனக் கேட்டுள்ளார்.  

அப்போது அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்பது தெரிய வந்ததையடுத்து பஸ்ஸின் உரிமையாளருக்கு வேறொருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

அதன்படி, பஸ்ஸின் உரிமையாளர் பொலிஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று பஸ்ஸை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் அழைத்துச் சென்றனர்.

Comments