சவூதியில் உயிரிழந்த நபர்; மூன்று மாதங்களின் பின் நாட்டுக்கு வந்த சடலம் | தினகரன் வாரமஞ்சரி

சவூதியில் உயிரிழந்த நபர்; மூன்று மாதங்களின் பின் நாட்டுக்கு வந்த சடலம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த போது மரணித்த ஒருவரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர்  நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.

மட்டக்களப்பு வாகரை பகுதியை சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு அனுப்பப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

வாகரை பாடசாலை வீதியின் அருகில் வசிக்கும் வேதாரணியம் சுதாகாரன் (வயது 38) என்பவரின் சடலமே வாகரை மயானத்தில் கடந்த 16ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இவர் சவூதி அரோபியாவில் பணிபுரிந்து வந்த சமயம் உடல் உபாதைக்குள்ளாகியுள்ளார். இவ்வருடம் மார்ச் மாதம் 26ஆம் திகதி மரணமடைந்திருந்தாரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

திருமணமாகாத இவர் கடந்த பத்தாண்டுகளாக சவூதி அரேபியாவிலேயே தொழில் வாய்ப்பை பெற்று பணியாற்றி வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments