கொழும்புக்கு சமைத்த உணவு மலையக மக்களுக்கு காணி | தினகரன் வாரமஞ்சரி

கொழும்புக்கு சமைத்த உணவு மலையக மக்களுக்கு காணி

கொழும்பு வாழ் மக்களுக்கு, ஒருவேளை சமைத்த உணவையும், பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.    உணவு நெருக்கடி தொடர்பில், பிரதமர் (17) நடத்திய கூட்டத்தில், இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அவர்   தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கான சமைத்த உணவை கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு மாநகர சமையல் அறைகள் ஊடாக இராணுவத்தினரால் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

அத்துடன், பெருந்தோட்டங்களிலுள்ள வெற்றுக் காணிகளை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மலையக மக்களுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments