களனி ஆற்றில் வீசப்பட்ட 05 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியது | தினகரன் வாரமஞ்சரி

களனி ஆற்றில் வீசப்பட்ட 05 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியது

சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.  

இச் சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் 05வயது சிறுவனுயடையதுதான் என பொலிஸார் தெரிவித்தனர்.  

வென்னப்புவவில் கரையொதுங்கிய சிறுவனின் புகைப்படத்தை சிறுவனது பாட்டியிடம் காண்பித்த பொலிஸார் அந்தச் சிறுவன்தான் என உறுதிப்படுத்திக் கொண்டனர்.    இதனையடுத்து சிறுவனின் பாட்டியையும் அழைத்துக் கொண்டு பொலிஸார் நேற்று சிறுவனின் சடலம் வைக்கப்பட்டுள்ள மாரவில ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளனர்.    கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு,தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாய் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   இதனையடுத்து, அவர் வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார், கடற்படை சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் எனினும் சடலத்தை அன்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.

புத்தளம் விசேட நிருபர்  

Comments