அகதியின் நாட்குறிப்பு நூல் வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

அகதியின் நாட்குறிப்பு நூல் வெளியீட்டு விழா

பூவரசி  பதிப்பகம் நடத்தும் குடத்தனை உதயனின் அகதியின் நாட்குறிப்பு (நாவல்) நூல்  வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18.06.2022) பிற்பகல் 2.30மணிக்கு  பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

விரிவுரையாளர்  வேல் நந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் வாழ்த்துரையை  எழுத்தாளர் பரணிதரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் சே.சுகுணா ஆகியோர்  வழங்குகின்றனர்.

வரவேற்புரையை ஊடகவியலாளர்  க.வரோதயனும், வெளியீட்டுரையை கவிஞர் ஈழவாணியும் நிகழ்த்தவுள்ளதுடன்,  விமர்சன உரையை கவிஞர் தீபச்செல்வனும், ஆய்வுரையை எழுத்தாளர் சர்மிளா  வினோதினியும் நிகழ்த்துகின்றனர்.

“அகதியின்  நாட்குறிப்பு” நாவலை  எழுத்தாளர் பா.ரகுவரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)  வெளியிடவுள்ளார். முதல் பிரதியை நெல்லியடி சாருஜன் மோட்டார்ஸ் உரிமையாளர்  கிருஷாந்த் சிவகுமாரும், இலங்கை மின்சார சபையின் (வட மாகாணம்) பிரதம  பொறியிலாளர் (பரி-பரா) யே.அமலேந்திரனும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பை நெடுந்தீவு சபேசன் மேற்கொள்வதுடன், ஏற்புரையை எழுத்தாளர்  குடத்தனை உதயன் நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து  சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Comments