பஜாஜ் அசல் உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் பிரதான நகரங்களில் | தினகரன் வாரமஞ்சரி

பஜாஜ் அசல் உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் பிரதான நகரங்களில்

இந்நாட்டிலுள்ள பஜாஜ் வாகன உரிமை யாளர்களின் வசதியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் பஜாஜ் அசல் உதிரிப்பாக விற்பனை நிலையங்களைக் குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் திறப்பதற்கு டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடெட்  நிறுவனம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இல 226,புத்தளம் வீதி,குருநாகல், இல 405,பிரவுண் வீதி,கொக்குவில் கிழக்கு,யாழ்ப்பாணம், இல 394,கொழும்புவீதி, நீர்கொழும்பு ஆகியமுகவரிகளில் புதிய பஜாஜ் அசல் உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள், கியூட் வாகனம் மற்றும் KTM மோட்டார் வாகனம் ஆகியவற்றுக்கானஅசல் உதிரிப்பாகங்கள் மற்றும் பஜாஜ் ஜெனுயின் ஒயில்,ஒராயன் மற்றும் MRFடயர், DP Accessories  முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அலங்கரிக்கும் துணைப்பாகங்கள் மோட்டார் வாகனங்கள், மற்றும் வர்த்தக வாகனங் களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அட்லஸ் டயர் போன்றவற்றை இந்த உதிரிப்பாக விற்பனைநிலையங்களில் மிகவும் சௌகரியமானமுறையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

பஜாஜ் அசல் உதிரிப்பாக விற்பனை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளவ ளாகத்திலேயேனும் வேர்க்ஷொப் அமைக்கப்பட்டிருப்பதால் வாடிக்கையா ளர்களுக்குத் தேவையானஅசல் உதிரிப்பாகங்களைஅங்கேயேவாகனங்களில் பொருத்திக்கொள்ளவதற்கான வாய்ப்பும் இங்கு காணப்படுகிறது.

Comments