மே 09வன்முறைகள்; இதுவரை 1,348பேர் கைது | தினகரன் வாரமஞ்சரி

மே 09வன்முறைகள்; இதுவரை 1,348பேர் கைது

நாட்டில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரம், அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  அதன்படி இதுவரை 1,348சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 638சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அவர்களில் 654பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவி செய்தமைக்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  அமைதி போராட்டத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து 70க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 100அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

அத்தோடு அலரி மாளிகைக்கு அரசு சார்பு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன. 

அலரிமாளிகை, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Comments