பயண ஆலோசனைகளை முறையாக முன்வையுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பயண ஆலோசனைகளை முறையாக முன்வையுங்கள்

வெளிநாடுகள் பலவற்றால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு வெளிவிவகார அமைச்சு முறையான விளக்கத்தை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயண ஆலோசனைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அனைவரும் ஒன்றிணைந்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

பற்றாக்குறையை ஒப்புக்கொண்டு சர்வதேச சமூகங்களுக்கு ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க வேண்டும். வெளிவிவகார அமைச்சர் ஒரு செயலூக்கமான பாத்திரத்தை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இலங்கைக்கான பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக திரட்டப்பட்ட நிதியை திருப்பி அனுப்புவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக மட்டுப்படுத்தியுள்ளன.  ஏனைய அமைச்சுக்களுக்கு இணையாக ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு வகுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Comments