இலங்கையை மீளக்கட்டியெழுப்ப இளம் தொழில் முனைவோர் முன்வைத்துள்ள 10 அம்சத்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையை மீளக்கட்டியெழுப்ப இளம் தொழில் முனைவோர் முன்வைத்துள்ள 10 அம்சத்திட்டம்

இலங்கை அதன் வரலாற்றில் மிகமோசமான சமூக, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தவறான நிர்வாகத்தால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. கொவிட்-19தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச்சரிவு போன்ற பேரண்ட பொருளாதாரக் காரணிகளாலும் இந்தச்சிக்கல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. தற்போதைய இந்நெருக்கடியை சமாளிக்க 10அம்ச செயலாக்க திட்டத்தை, இலங்கையின் இளம்தொழில்முனைவோர் சம்மேளனம் (COYLE) உள்ளிட்ட தொழில்சார் நிறுவனங்களின் குழு முன்வைத்துள்ளது. குறித்த குழுவில், Chamber of Commerce and Industries of Yarlpanam, Nugegoda Entrepreneurs and Professionals Alliance, Minuwangoda Trade Association, Lanka Business Ring, Nawalapitiya Traders Association, Entrepreneurs Lanka, Mahanuwara Sinhala WelandaPeramuna, Kiribathgoda Sinhala Merchant Association, Galle District Chamber Of Commerce & Industries, Event Management Association-Sri Lanka, Lanka Confectionary Manufactures Association, Kurunagala Sinhala WeladaPeramuna, All Ceylon Bakery Owners Association, Association of container transport, Association of clearing and forwarding and the Federation of Chambers of Commerce and Industry of Sri Lanka ஆகிய அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இக்குழுவானது இத்திட்டத்தை முன்வைத்திருந்தது.

இதன்முதலாவது அம்சமாக, அரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரத்தன்மை உடனடியாக அவசியம் என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. இது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைப்பதுடன் அமைச்சரவை மற்றும் ஏனைய முக்கிய பதவிகளில், பொருத்தமான, நிபுணத்துவம் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களை நியமிப்பதை குறிக்கின்றது.

Comments