WhatsApp மற்றும் Viber ஊடாக வங்கிச் சேவைகளை வழங்கும் கொமர்ஷல் வங்கி | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

WhatsApp மற்றும் Viber ஊடாக வங்கிச் சேவைகளை வழங்கும் கொமர்ஷல் வங்கி

சமூக வலையமைப்புக்கள் ஊடாக வங்கிச் சேவைகளை வழங்கும் இலங்கையின் முதலாவது வங்கியான கொமர்ஷல் வங்கி வட்ஸ்எப் மற்றும் வைபர் செயலிகள் ஊடாக மும்மொழிகளிலும் வங்கிச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் முதல் தடவையாக இவ்வாறான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்த சேவைகள் பட்டியலில் தற்போது இதுவும் இடம் பிடித்துள்ளது.

இதன் விளைவாக மேற்படி செயலிகளைப் பயன்படுத்தும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு மீதி விசாரணைகள், கணக்கு விபர மேலாய்வுகள், காசோலை புத்தகத்துக்கான வேண்டுகோள், கொம்பேங்க் டிஜிட்டலுடனான பதிவுகள், புதிதாக பிளாஷ் டிஜிட்டல் கணக்குகளை திறத்தல் போன்ற சேவைகளை தமக்கு தேவையான மொழிகளில் தெரிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இந்த சேவைகளைப் பெறுவதற்கான தொடர்பு கொள்ளலின் போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் என தமக்கு விருப்பமான மொழியைத் தெரிவு செய்து கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி ஏற்கனவே மும்மாழிகள் மூலமான இணையத்தள சேவையைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை நலன் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஓரிட மும்மொழி தொடர்பாடல் மையத்தையும் அது கொண்டுள்ளது. இதன் மூலம் எழுத்து மூலமான தொடர்பாடல், வாடிக்கையாளர் தேவைகள், வாடிக்கையாளர் கருத்துக்கள் என்பனவும் சமூக ஊடகங்கள் வாயிலாக குறிப்பிட்ட குழுத் தலைவர்கள் மற்றும் பயிலுனர்கள் ஊடாகப் பெறப்படுகின்றன.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி, உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடா்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கியாகும்.
 

Comments