DFCC வங்கியின் 25வது வெளியக ATM அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

DFCC வங்கியின் 25வது வெளியக ATM அறிமுகம்

தனது பிரசன்னத்தை மேம்படுத்துவது, நிதி உள்ளடக்கத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிக்கும் தந்திரோபாயத்துக்கமைய, அனைவருக்குமான வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் DFCC வங்கி, தனது 25 ஆவது வெளியக ATM/CRM ஐ பனாகொட, டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டை வளாகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன், டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டையைச் சேர்ந்த அதிகாரிகளும், தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களும் அடங்கியிருந்தனர். இந்த வலயத்தில் 34 நிறுவனங்கள் மற்றும் 5000 க்கும் அதிகமான ஊழியர்கள் காணப்படும் நிலையில், இந்த அமைவிடத்திலிருந்து 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ATM/CRM சேவை அமைந்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், சௌகரியமான முறையில் தமது டிஜிட்டல் நிதிச் சேவைகளை பொது மக்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

DFCC வங்கியின் புதிய வெளியக வசதிகளில், நவீன வசதிகள் படைத்த CRM இயந்திரமும் அடங்கியுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், DFCC வங்கிக் கணக்குகளுக்கு பண வைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். மேலும், DFCC வாடிக்கையாளர்களுக்கு கார்ட் மற்றும் கார்ட் இல்லாத கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியும், DFCC கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

CRM இயந்திரத்துக்கு மேலதிகமாக, DFCC வங்கியினால் Pay and Go இயந்திரமொன்றும் நிறுவப்பட்டுள்ளதுடன், அதனூடாக பொது மக்களுக்கு இலகுவான முறையில் டிஜிட்டல் மொபைல் ரீலோட்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் காப்புறுதி, லீசிங் போன்ற நிறுவனசார் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முடியும். மொபைல் ரீலோட் வசதியினூடாக, சகல வலையமைப்பு சேவை வழங்குநர்களின் இணைப்புகளுக்கும் ரீலோட் செய்து கொள்ள முடியும் என்பதால், பணியாளர்களுக்கு பெரும் சௌகரியமானதாக அமைந்துள்ளது.

 

Comments