பவர் Toastmasters கழகம் ஸ்தாபிப்பு | தினகரன் வாரமஞ்சரி

பவர் Toastmasters கழகம் ஸ்தாபிப்பு

தனது ஊழியர்கள் மத்தியில் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை கட்டியெழுப்பும் நோக்கில், முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், Baurs Toastmasters Club (BTC) எனும் கழகத்தை நிறுவியிருந்ததுடன், அதன் நிறைவேற்றுக் குழுவின் ஸ்தாபிப்பு வைபவத்தையும் முன்னெடுத்திருந்தது.

கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏப்ரல் 29 ஆம் திகதி, மங்கல விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் ப்லாசர் கலந்து கொண்டதுடன், மாவட்ட பணிப்பாளர் DTM ஸ்ரீயந்தி சல்காடோ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பவர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், The Colombo Toastmasters Club இன் தலைவர் DTMசியாமலி ஜயசேகர அடங்கலாக District 82 Toastmasters International அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரொல்ஃப் ப்லாசர் கருத்துத் தெரிவிக்கையில், “Baurs Toastmasters Club ஸ்தாபிப்பில் கலந்து கொள்ள முடிந்தமை உண்மையில் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. எமது பல நிறுவன அங்கத்தவர்களுக்கு வினைத்திறன் வாய்ந்த தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், முக்கியமாக தாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

Toastmasters Internationalஐப் பொறுத்தமட்டில் பவர் நிறுவனத்துக்கு புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பல பிரிவுகளில் பல்வேறு பேச்சுத்திறன் விருத்தி நிகழ்வுகளை முன்னெடுத்திருந்ததுடன், இதற்கு Colombo Toastmasters Clubஇன் வழிகாட்டல்களையும் பெற்றிருந்தது.

 

Comments