சுற்றுலாத்துறை சிறு வணிகங்களுக்கு மானியமாக ஐரோப்பிய ஒன்றியம் ரூபா 60 மில்லியன் நிதியுதவி | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறை சிறு வணிகங்களுக்கு மானியமாக ஐரோப்பிய ஒன்றியம் ரூபா 60 மில்லியன் நிதியுதவி

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு ஆரம்பித்துள்ள நிலையில், சுற்றுலாத்துறையிலுள்ள சிறு வணிகங்கள் கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னரான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான வலுவாக அத்திவாரத்தைக் கட்டியெழுப்புவதை விரைவுபடுத்த உதவும் வகையில், இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் தலா ரூபா 1 மில்லியன் பெறுமதியான முதல் மூன்று மானியங்களை வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய ‘சுற்றுலாத்துறை மீள் எழுச்சித்திட்டம்’ என்பதன்கீழ் அடுத்த இரண்டு மாதங்களில் 60 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளன.

நிதிப் பற்றாக்குறையால் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் தங்கள் வணிகத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் காட்டுகின்றன. இந்த மானியங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும், எதிர்காலத்தில் மேலும் மீள்எழுச்சியுடன் செயல்படுவதற்கும் சிறந்த ஸ்தானத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சாய்பி முதல் மானியங்களை வழங்கும் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “சுற்றுலாத்துறையில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மானிய நிதி உட்பட பல முனைகளில் அவற்றுக்கு ஆதரவு தேவைப்படுகிறது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக உள்ளூர் சுற்றுலாத்துறையை மற்றொரு நிச்சயமற்ற நிலைமைக்கு தள்ளுகிறது. எனவே, குறுகிய காலத்தில் வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தவும் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அத்திவாரத்தை இடவும் இலங்கை சுற்

 

Comments