
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பிலமைந்துள்ள வீட்டுக்கு முன்னாலேயே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் ஆதரவாளர்கள் இப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்க வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,
எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் நாளை திங்களன்று என்னை சந்திக்கலாமென தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இப் பகுதியில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.