எரிபொருள் விநியோகத்தில் வரையறுக்கப்பட்ட நிலை | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் விநியோகத்தில் வரையறுக்கப்பட்ட நிலை

எரிபொருள் விநியோகத்தில்  வரையறுக்கப்பட்ட நிலை

டுவிட்டர் பக்கத்தில் கஞ்சன விஜேசேக்கர பதிவு

தினமும் 04 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் 02 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படுமென மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திகள்  மீள ஆரம்பிக்கப்படும் வரை வரையறுக்கப்பட்ட வகையில் இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை வந்துள்ள கப்பல்களிலிருந்து மேலும் 40 ஆயிரம் மெற்றி தொன் பெற்றோல் மற்றும் மசகு எண்ணெய் நாளை திங்கட்கிழமை இறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Comments