எனது வீட்டில் சந்திப்பா? அசிங்கப்படுத்த வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

எனது வீட்டில் சந்திப்பா? அசிங்கப்படுத்த வேண்டாம்

 

தொழிலதிபர் திருக்குமார் நடேசன் கவலை

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்குமிடையில் தனது வீட்டில் கலந்துரையாடல் நடைபெற்றதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதென  பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன் தெரிவித்துள்ளார்.

“திருமதி ஹேமா பிரேமதாச என்பவர் நான் மதிக்கும் ஒரு பெண்மணி. கடந்த 10 வருடங்களாக நான் அவரை சந்திக்கவில்லை. மேலும், ஒரு வாரத்துக்கு மேலாக நான் இலங்கையில் இருக்கவில்லை. தொழில் விடயமாக வெளிநாடு சென்றிருந்தேன்.

நீங்கள் கூறுவது போல் ஹேமா பிரேமதாசவோ அல்லது அரசாங்கத்தின் பலமானவர்களோ அல்லது எவரேனும் இந்த நாட்களில் எனது வீட்டுக்கு வரவில்லை. எனது வீட்டில் அவ்வாறான அரசியல் கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. அந்த விடயம் முற்றிலும் பொய்யான ஒன்றாகும்.

அரசியல்வாதிகள் என்ன செய்தாலும், வயது முதிர்ந்த பெண்ணாக உள்ள முன்னாள் முதல் பெண்மணி தொடர்பில் இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவது அசிங்கமானது. அதை செய்ய வேண்டாம்.

குற்றச்சாட்டு முன் வைப்பவர்கள் முடிந்தால் என் வீட்டில் அப்படி ஒரு விவாதம் நடந்ததை நிரூபித்துக் காட்டலாம். நான் அரசியல் செய்யவில்லை.

நான் அரசியலில் பணம் சம்பாதிக்கவில்லை. என்னை ஈடுபடுத்த வேண்டாம்” என திருக்குமார் நடேசன் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தொடர்பில் திருக்குமார் நடேசனின் தலையீட்டில் கலந்துரையாடல் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments