ஆற்றில் நீராடச் சென்ற இரு சிறார்கள் மரணம் | தினகரன் வாரமஞ்சரி

ஆற்றில் நீராடச் சென்ற இரு சிறார்கள் மரணம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தர்களே பலி

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி அகால மரணமான துயரச் சம்பவம் வெள்ளிக்கிழமை (06) நண்பகல் வேளையில் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்றிலிருந்து வாங்காமம் பிரதேசத்திற்கு விடுமுறையை கழிப்பதற்காக குடுபத்தினருடன் சென்ற 08 வயதான பெண் பிள்ளை மற்றும் 06 வயதுடைய ஆண் பிள்ளை இருவரும் அப்பிரதேசத்திலுள்ள நீரோடையில் குளிப்பதற்காக சென்ற சமயம், அளவுக்கதிகமாக நீர் வந்ததனால் இவர்கள் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அதன்பின்னர் அப்பிரதேச மக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய பெண் பிள்ளை உடனடியாக காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததோடு, ஆண் பிள்ளை உயிரிழந்த நிலையில் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இருவரினதும் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

Comments