அம்மா | தினகரன் வாரமஞ்சரி

அம்மா

இணுவில் வாகீசன்

 

இல்லத்தின் அட்சயபாத்திரம்

உலகின் நிலைத்திருக்கும் அதிசயம்

குடும்ப நலன் பேணிடும்

கடமைகள் வகுத்திடாத சேவகி

 

பொருளற்ற உலகிலும் பொறுப்பாய்

பெற்றவர் பசியாற்றிடும் தெய்வம்

பெற்றவர் நலனிற்காய் என்றும்

தன் இன்பம் துறந்து மகிழ்ந்திடுவர்

 

பிள்ளைகள் வளமாய் வாழ

இறைவனிடம் வரங்கள் கேட்டு

இறைஞ்சியே நாளும் வாழ்வார்

வேறொன்றும் தமக்கு வேண்டிலார்

 

ஓய்வில்லா உலக இயக்கத்தின்சேய்

சேயினை காக்கும் தடுப்பூசி

நோயினை போக்கும் மாத்திரைகள்

தாயெனும் வீட்டுக் கருவறை

Comments